206
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் 11 ம் திகதி ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 25 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
அது தொடர்பான முன்னேற்பாட்டு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.
அதில் முப்படைகளின் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் , இந்திய நிதியுதவியில் யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவுள்ள தகவலை தெரிவித்தார்.
Spread the love