189
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
பருவ மழையினை அடுத்து யாழில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பு காரணமாக , யாழில். டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த ஆண்டில் 09 பேர் டெங்கு காய்ச்சலினால் யாழில். உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது , ஆயிரத்து 505 குடியிருப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன் போது 74 குடியிருப்புக்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டன. அதில் 65 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் , 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதேவேளை , டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 111 குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , அவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love