191
மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இன்றைய தினம் வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.
அதன் போது, மலையக வாழ் மக்களின் அறப்போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவுருவ படத்திற்கு ஈகை சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக மாணவர் ஒன்றியத்தின்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கு பற்றி உயிர் நீத்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் “மலையக தியாகிகள்” என அடையாளப்படுகிறது.
Spread the love