215
ஜனாதிபதி மாளிகையிலிருந்த பணம் காணாமற்போன வழக்கில் இருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (13) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பிணை உத்தரவு வழங்கப்பட்டள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த 72 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் வசந்த முதலிகேவை கோட்டை காவல் நிலையம் 73 ஆவது சந்தேகநபராக பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love