196
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் திங்கட்கிழமை செலுத்தியது. யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செலுத்தப்பட்டது. யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.
வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளது என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
Spread the love