215
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில், வாள் முனையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.அச்சுவேலி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை அநாதரவான நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாள் முனையில் வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என கண்டறியப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை வழிப்பறி செய்த கொள்ளை கும்பல் தொடர்பிலும், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டனரா? என்பது தொடர்பில் அச்சுவேலி மற்றும் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love