293
அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை(18) ஆரம்பமான இந்நிகழ்வானது அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.அத்துடன் கண்காட்சி போட்டி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு அதிதிகளாக கலந்து கொண்டோர் அதில் பங்கேற்று விளையாடினர்.
தொடர்ந்து சமய ஆராதனை அதிதிகள் விளக்கேற்றல் வரவேற்புரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு திடல் தொடர்பிலான பெட்டக காட்சி அத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய டெனிஸ் திடல் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவர் இக்பால் பின் இஷாக்கின் பங்களிப்பின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மேலும் 07 பாடசாலைகளில் டென்னிஸ் மைதானங்கள் நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 03 மாதங்களில் மேற்கொள்ளப்பட உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த புதிய டென்னிஸ் மைதானம் 02 மாதங்கள் 20 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதுடன் இந்த டென்னிஸ் மைதானத்தின் செலவு 58 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும்.மேலும் இந்த டென்னிஸ் மைதானம் நிர்மாணமானது டி.எஸ் சேனநாயக்க கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.அத்துடன் இந்த நிர்மாணத்திற்கு அம்பாறை வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தகர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
Spread the love