இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என பிரித்தானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை அறிக்கை இன்று (01) ஆராயப்பட்ட போதே இவ்வாறு தொிவிக்கப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓரினச்சேர்க்கையை குற்றமாக்க கருதுவதனை நீக்க வேண்டும் எனவும் அவா்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ´உலகளாவிய கால ஆய்வு ´ குழு நடத்திய கூட்டத்தில், இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவினால் மீளாய்வு செய்யப்படும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஆய்வுகள் 2008, 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டன.
அரசாங்கம் வழங்கிய அறிக்கைகள், மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகள், மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புகள், தேசிய மனித உரிமை நிறுவனங்கள், பிராந்திய நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு செய்யப்படுகினற்மை குறிப்பிடத்தக்கது