291
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
புங்குடுதீவை சேர்ந்த 45 வயதுடைய ஜெய பரமேஸ்வரன், அவரது மனைவி 43 வயதுடைய மாலினி தேவி மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இலங்கையில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (03.02.13) மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு சென்றடைந்து, கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்து ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி காவல் நிலைய காவற்துறையினர் மற்றும் க்யூ பிரிவு காவற்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love