187
அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களில் உளவு பார்த்ததாக கூறப்படும் சீனவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தமது போர் விமானங்கள் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது.
ஒரு சிறிய வெடிப்புக்குப் பிறகு பலூன் கடலில் விழுவதை அமெரிக்க தொலைக்காட்சிகளின் காணொளிகள் காட்டின.
தென் கரோலினாவின் மர்டில் கடற்கரைக்கு அருகில், ஆழம் குறைந்த 47 அடி கடலில் இந்த பலூன் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (a)
Spread the love