229
யாழ்ப்பாணம் நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி காவல்நிலைய விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுமார் 63 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love