199
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை (06.02.23) ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700 ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், நேற்று (10.02.23) இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 நாட்களே ஆன சிசுவும் அதன் தாயும் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகள் விரைவாகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரசேப் தயிப் எர்டோகன் அறிவுறுத்தியுள்ளார்.
Spread the love