துருக்கியிலும் சிரியாவிலும் அண்மையில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் துருக்கியில் தற்போதைய (12.02.23) நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 24,617 ஆகவும் சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 3,500 ஐயும் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (06.03.23) ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் சட்டத்தை மீறுபவர்கள் அவசரகால விதிகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் எச்சரித்துள்ளார்.