குறித்த குழுவில் விசாரனைப் பணிப்பாளர், சட்ட வல்லுநர் ஆகியோரும் சென்றிருந்தனா்.குறித்த குழுவினர் யாழ்.மாவட்ட மத தலைவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டனர். அதன் போது, போதைப் பொருள் பாவனை ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ் அளித்தல். சமய நிறுவனங்கள் புனர்வாழித்தலுக்கு எவ்வாறு உதவ முடியும் ? , இது குறித்து மனித உரிமை ஆணைக்குழு எவ்வாறு உதவ முடியும் ? என்பது தொடர்பாக கருத்துரையாடல் இடம் பெற்றது.
அத்துடன் வடமாகணத்தில் உள்ள மூன்று பிரதிக் காவல்துறைமா அதிபர்களுடனும் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, தற்போது வடமாகாணத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாகவும் இதே போல காவல்துறையினருக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.