இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று (17) புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியா, சம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.