206
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
Spread the love