Home இலங்கை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 91 இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 91 இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

by admin

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு கோடியே 91 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருட்களுடன் ஒரு தொகுதி மருந்துகளும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் லங்கா லயன்ஸ் பவுண்டேசனால் வழங்கி வைக்கப்பட்டது.

புற்றுநோயாளர்களது வைத்திய தேவைகளை முன்னிலைப்படுத்தி, விரைவான ,பாதுகாப்பான , வைத்திய சேவைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை விடுதிகளுக்கான ஒட்சிசன் தேவைகளை மேம்படுத்துவதற்காகவும் லயன்ஸ் கழகத்தினரால் இந்தப் பொருள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக, மாவட்ட ஆளுநர் வைத்தியர் லயன் அனோமா விஜிசிங்கவும் சிறப்பு விருந்தினராக முன்னாள் சர்வதேச லயன்ஸ் கழக ஆளுநர் லயன் சுனில் வட்டவலவும் கலந்துகொண்டனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சார்பில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் கிருஷாந்தி இராஜசூரியர் ஆகியோர் இந்த உபகரணங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More