Home இலங்கை சிறுவர் இல்ல சிறுவர்கள்  பாலியல் துன்புறுத்தல் – நிர்வாகியின்  கணவர் கைது

சிறுவர் இல்ல சிறுவர்கள்  பாலியல் துன்புறுத்தல் – நிர்வாகியின்  கணவர் கைது

by admin

ரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை   பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின்  கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர்  கடந்த 25 ஆம் திகதி ரக்வானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக கூறப்படும் யுவதிகள், மற்றும் சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள், சிறுமிகள் வயது பூர்த்தியடைந்தவுடன் நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து  பாடசாலைக்கு அனுப்பப்படுபவர்களே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே அவரது கணவரால் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More