211
யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் (வயது 63) என்பவரே உயிரிழந்தார். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love