வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116 ஆவது போட்டியில் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டி 9,10,11 ஆகிய திகதிகளில் இரண்டு இனிங்ஸ்களாக நடைபெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி தனது முதல் இனிங்ஸிலே 66 ஓவர்களின் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து முதலாம் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்பாணம் பரியோவான் கல்லூரி 51.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.
153 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த மத்திய கல்லூரி பலோன் முறையில் இரண்டாம் இனிங்சிற்காக முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்பத்தை யாழ் பரியோவான் கல்லூரிக்கு வழங்கிய நிலையில் இரண்டாம் இனிங்ஸ்ற்காக துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 54 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இதனையத் தொடா்நது 9 ஓட்டங்களை மட்டுமு எடுக்க வேண்டியிருந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கட்டை இழந்து 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.