285
அக்கரைப்பற்று – ஒலுவில் கடலில் நீராடச்சென்ற தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச்சென்ற குறித்த இளைஞர், அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது.
ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love