193
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல ஸ்ரூடியோ ஒன்றினால் இரண்டு குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக உறவினர் வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழ்.நகர் பகுதியில் உள்ள பிரபல ஸ்ரூடியோ ஒன்று தமது ஸ்ரூடியோ கழிவுகளை சாவகச்சேரி பகுதியில் குடியிருப்புக்கள் உள்ள பகுதியில் உள்ள தமக்கு சொந்தமான வெற்று காணிக்குள் கொட்டி தீ மூட்டியுள்ளனர். அதனால் எழுந்த இரசாயன புகைகள் காரணமாக அந்த காணிக்கு அருகில் உள்ள இரண்டு வீடுகளில் வசித்தவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
கழிவுகளை எரியூட்டிய பின்னர் எழுந்த இரசாயன புகைகள் மற்றும் மனம் காரணமாக வீடுகளில் வாசிக்க முடியவில்லை. மூச்சு விட கடினமான நிலைமை ஏற்பட்டது. அந்த தீயினை அணைக்க முயற்சித்தோம். அதன் அருகில் போக முடியாத அளவுக்கு புகை மண்டலமாக இருந்தது. அதனால் வீட்டினை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கினோம் என தெரிவித்தனர்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறைியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love