261
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்டமையை அடுத்து இருவரும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.. காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இருவர் இன்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர்.
அதனை அடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியதுடன் , வைத்தியசாலை காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து காவல்துறையினர் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love