244
யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில் மேசன் வேலை செய்யும் போது, வீட்டின் மேற்புறத்தில் கம்பியை கொண்டு வேலை செய்த வேளை, கம்பியானது பிரதான வீதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பியுடன் தொடுகையுற்றதால் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அங்குள்ளவர்கள் அவரை மீட்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைக் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love