210
புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகளால் அறுவடை செய்த புதிய நெல்லில் இருந்து பெற்ற அரிசி வழங்கப்பட்டது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியில் வாசம் செய்யும் புத்த பகவானை ஆராதிப்பதற்கு மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் உங்களுக்கு அருகில் உள்ள கமநல சேவைகள் நிலையத்திற்கு புத்தரிசியை எடுத்து வந்து வழங்க முடியும் என கமநல சேவை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு ள்ளது.
Spread the love