294
ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் , மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது
Spread the love