195
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கத் தீா்மானித்த நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று (23) கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலன் போது நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீடிக்கப்பட்ட கடனாக வழங்க அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love