இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூண்டு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 450 ரூபாவாகவும் ஒரு கிலோ நெத்தலியின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 100ரூபாவாகவும் ஒரு கிலோ கடலையின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 555 ரூபாவாகவும் ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 210ரூபாவாகவும் ஒரு கிலோ கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 298 ரூபாவாகவும் ஒரு கிலோ உள்நாட்டு உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 270 ரூபாவாகவும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 119 ரூபாவாகவும் 425 கிராம் ரின் மீனின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 520 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.