207
மன்னார் – சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (24) நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த திணைக்களங்களின் அதிகாரிகளை ஜூலை 05 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டு, அன்றைய தினம் வரை வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Spread the love