328
வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளதுடன் ஆதி சிவனின் சிவலிங்கமும் உடைத்து பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளன.ஆதி லிங்கேஸ்வரர் இருப்பிடத்தில் இருந்து உடைத்து வீசப்பட்டுள்ளதுடன், ஆலயத்தில் இருந்த ஏனைய விக்கிரகங்களும் உடைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆலய பக்தர்கள் மத்தியில் கடும் கோப ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.வெடுக்கு நாறி மலை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love