கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் இன்று (27) கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் வௌியேற்றும் குழியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குறித்த குழியில் விழுந்துள்ளதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக மற்றையவரும் கழிவு நீர் குழியில் இறங்கிய வேளை, அவரும் கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் இருவரும் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 10 மற்றும் 14 பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.