உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தொிவித்துள்ளாா்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (28) ஆரம்பமாகவுள்ளதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற மாட்டாது. என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தொிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.