கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலக கிண்ண கால்பந்து போட்டியில் லயனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியிருந்தது. . . இதன் மூலம் மெஸ்சி தான் உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்பதை நிரூபித்தார்.
இந்தநிலையில் உலக சம்பியனான அர்ஜென்டினாஅணி மற்றும் குராக்கோ அணிகளுயுக்கிடையில் நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இன்று அதிகாலை நடந்தது. இதில் அர்ஜென்டினா 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதில் அர்ஜென்டின அணித்லையவும் , நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்து ஹட்ரிக் சாதனை புரிந்துள்ளாா். மெஸ்சி முதல் கோலை அடித்த போது சர்வதேச போட்டியில் 100 கோல்களை தொட்டார். அவர் அர்ஜென்டினா அணிக்காக 174 போட்டியில் விளையாடி 102 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் 100 கோல்களை அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றுள்ளாா்.
. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 198 போட்டியில் விளையாடி 122 கோல்கள் அடித்து முதல் இடத்திலும் ஈரான் நாட்டை சேர்ந்தவரான அலிடாய் 148 ஆட்டத்தில் 109 கோல்கள் அடித்து 2-வது இடத்திலும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது