தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் எழுத்துமூலம் நேற்று(29) இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு சபை நேற்று பிற்பகல் கூடவிருந்த போதிலும், தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் எவரும் சூம் தொழில்நுட்பத்தினூடாக பங்குபற்றவில்லை என குறிப்பிடப்படுகின்றது. அது குறித்து நீங்கள் வியப்படைய வேண்டாம் எனவும், இனி தேசிய விளையாட்டு சபையின் தலைவராக உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.