264

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட ஓட்டோ பஸார் சந்தி அருகில் இருந்த வாழைப்பழம் மற்றும் இடியப்பம் விற்கும் கடை இன்று மதியம் திடிரென தீப்பிடித்ததில் சாம்பலாகியுள்ளது.
குறித்த சம்பவம் அறிந்து கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினரும் கல்முனை தலைமையக காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தினால் கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


Spread the love