181
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 52வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றது. இலங்கையில் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் ஆரம்பித்த நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரம் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Spread the love