192
பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனாப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுடன் மேலும் இருவருமாக 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Spread the love