224
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தூர் பகுதியை சேர்ந்த 71 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களில் ஐந்து பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு (வென்டிலேட்டர்) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர்களில் ஒருவரின் உடல் நிலை மோசமாக காணப்பட்டது. அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love