255
தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
12 சகோதரங்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நல்லதம்பி சசிகரன் என்பவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அதேவேளை மோசடியாக முடிக்கப்பட்ட உறுதிக்கு சாட்சிக் கையொப்பமிட்ட முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஒருவரும் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love