226
பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு உள்ளதாக பலாலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு வயது 21 எனவும் அவர் அதே பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை மர்மமான படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் இந்த கஞ்சா கடற்படையின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 80 லட்சத்துக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சா கடத்தலுடன் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளார் எனவும், குறித்த இளைஞனுக்கு இரண்டு பியர்களை வாங்கிக் கொடுத்துவிட்டு பிரதான கஞ்சா கடத்தல் நபர் இந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
Spread the love