சூடானில் நேற்று(24) நள்ளிரவிலிருந்து 72 மணித்தியால போர் நிறுத்தம் மேற்கொள்ள மோதலில் ஈடுபடும் தரப்பினர் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
சூடானிய இராணுவம் மற்றும் ஆா்எஸ்எப் எனப்படும் துணை இராணுவப் படை ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் இந்த மாதம் மோதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அறிவிக்கப்படும் மூன்றாவது போர் நிறுத்தமாக இது அமைந்துள்ளது.
இந்த மோதல்கள் காரணமாக 400 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தமது இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளை வௌியேற்றும் நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.