இந்தோனோசியாவில் நேற்று முன்தினம் கெப்புலவுன் படு எனும் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உண்டான நிலையில் இன்று மீண்டும் அங்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கு சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ள ப இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்து மக்கள் உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, மென்டலாய் தீவு உள்ளிட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பின்னா் சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், மருத்துவமனைக் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ள போதிலும் முழுமையான சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல் வெளியாகவில்லை.