226
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை நிலவிய சீரற்ற காலநிலையின் போது தனது வீட்டு வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பத்மநாதன் தெய்வானை (வயது-62) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற மடு காவல்துறையினா் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love