சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழரான தங்கராஜூ சுப்பையா(46) என்பவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என ஐ.நா. உட்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை புறந்தள்ளி சாங்கி சிறைச்சாலையில் இன்று புதன்கிழமை அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தொிவித்துள்ளனா்.
பலவீனமாக சாட்சிகள், விசாரணையின் போது மிகக் குறைந்த சட்ட உதவி ஆகியவற்றைக் கொண்டே அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதாக மரண தண்டனைக்கு எதிரான ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனா். எனினும் , எல்லாம் உரிய முறைப்படி நடந்ததாகக் தொிவித்துள்ள சிங்கப்பூர் அரசு அதிகாரிகள், தொிவித்துள்ளனா்.
46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை விநியோகம் செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. விநியோகம் செய்யும் போது அவர் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும் அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் தங்கராஜுவுக்காக விநியோகம் செய்த நபர் பயன்படுத்திய இரண்டு கைத் தொலைபேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தான் இல்லை என வாதிட்ட தங்கராஜு தனது ஒரு கைத் தொலைபேசி தொலைந்து போய் விட்டதாகவும் காவல்துறையினா் கண்டுபிடித்த மற்றொரு கைத் தொலைபேசி தன்னுடையது இல்லை என்றும் தொிவித்திருந்தாா்.
2018-ம் ஆண்டு தங்கராஜூ சுப்பையா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது