226
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தினார். தொடர்ந்து, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.நவரட்ணம்
நினைவுப் பேருரையாற்றினார்.
Spread the love