Home இலங்கை கடற்றொழில் அபிவிருத்திக்கு சவூதியின் ஒத்துழைப்பை பெற முயற்சி!

கடற்றொழில் அபிவிருத்திக்கு சவூதியின் ஒத்துழைப்பை பெற முயற்சி!

by admin

 

கடற்றொழில் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு சவூதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சாின் ஊடகப் பிரிவு:- தொிவித்துள்ளது.  கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (27.04.2023) வருகைதந்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்விடயம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது.

 

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னேற்றும் நோக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய பல்வேறு திட்ட முன்வைரைபுகள் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை சவூதி அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சரின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

– 2

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More