195
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகள் இருவரையும் காவல்துறையினா் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஊர்காவற்துறை பகுதிக்கு இரண்டு டிப்பர் வாகனங்களில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மணல் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் உள்ள காவல்துறை காவலரணில் டிப்பர்களை மறித்து ஊர்காவற்துறை காவல்துறையினா் சோதனையிட்ட போது மணல் எடுத்து செல்வதற்கான அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதனை காவல்துறையினா் அறிந்து அதன் சாரதிகள் இருவரையும் கைது செய்ததுடன் , டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றினர்.
விசாரணைகளின் பின்னர் சாரதிகளையும் வாகனங்களையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love