249
2 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொத்துவில் தலைமையக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
அம்பாறையில் கஜமுத்துகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அம்பாறை மாவட்டம் பொத்துவில் காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட அல் ஹலாம் வீதி பகுதியில் செவ்வாய்க்கிழமை(2) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது கல்முனை விசேட அதிரடிப்படைக்கு உதவியாக அறுகம்பை முகாம் விசேட அதிரடிப்படையினரும் களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடவடிக்கையின் போது 2 கஜமுத்துகளை கடத்திவந்த 60 ,37 வயதுடைய இரு சந்தேக நபர்களை மாறுவேடத்தில் செனற விசேட அதிரடிப்படை அணி கைது செய்ததுடன் கஜமுத்துக்கள் மற்றும் இதர சான்று பொருட்களை பொத்துவில் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love