மொஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான கிரெம்லினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஸ்யா தொிவித்துள்ளது . ஜனாதிபதி விளாடிமிர் புதினை கொல்ல அவை ஏவப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ள ரஸ்யா அதற்கு “எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்” பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், ஆளில்லா விமான தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரண்டு உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் இன்று புதன்கிழமை அதிகாலை கிரெம்லினைத் தாக்க முயன்றதாகவும், ஆனால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த “பயங்கரவாத தாக்குதலில்” புதின் காயமடையவில்லை எனவும் கிரெம்லின் மாளிகை வளாகத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் புதினின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மே 9 ஆம் திகதி இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான வெற்றியினை கொண்டாட ரஸ்யா தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது