203
இந்த விமானம் இலங்கையின் கடல் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதுடன் நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளாா்.
Royal Australian Air Force க்கு சொந்தமான KA350 King Air விமானத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த விமானத்தை இலங்கைக்கு வழங்குவதற்கான , அவுஸ்திரேலிய உள்துறை விவகார அமைச்சரின் கடிதத்தை, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
Spread the love